Monday, August 29, 2005

தென்னைமரங்களைத் தாக்கும் மற்றோரு பூச்சி

காண்டாமிருக வண்டு:(Oryctes rhinoceros)

இவ்வண்டினால் தாக்கப்பட்ட மரங்களில் ஒழுங்கான வடிவம் கொண்ட வெட்டுக்களை இலைகளில் காணலாம். வளர்ந்த பூச்சிகளும் மரங்களிலும் இலைகளிலும் துளையிடும்.
ஜூன் ஆகஸ்ட் மாதங்களில் இந்த பூச்சி வெளிவரும். இதன் வாழ்க்கை சுழல் 3-9 மாதங்கள்



  • ஒரு கிலோ புண்ணாக்கை ஐந்து லிட்டர் தண்ணீரில் போட்டு அதனை வாய்திறந்த பானைகளில் வைத்து தென்னந்தோப்புகளில் புதைக்கலாம்.

  • ஒளிப்பொறிகளுக்கு இவை ஈர்க்கப்படும் (குறிப்பாக பருவ மழை முடிந்தவுடன்)

  • வேப்பங்கொட்டை தூள் மணல் 1:2 என்ற விகிதத்தில் 150 கிராம் கலவையை மரத்தின் ஆக உள்ளுக்கு இருக்கும் இலைகளின் அடிப்பகுதியில் வைப்பது இப்பூச்சியை நன்றாக கட்டுப்படுத்துவதாக TNAU செய்தி (தி ஹிண்டு, 7-ஜூலை-2005) தெரிவிக்கிறது.

தி ஹிண்டு செய்திக்கு இங்குபார்க்கவும்.
பூச்சி குறித்து அதிக தகவல்களுக்கு இங்கு பார்க்கவும்.

3 comments:

Unknown said...

நீங்கள் மிகவும் நல்ல தகவல்களைத் தருகிறீர்கள் நன்றி.
உங்கள் பதிவு பற்றி இன்றைய தினமலர் அறிவியல் ஆயிரம் பகுதியில் வந்துள்ளது.
http://www.dinamalar.com/2005oct21/flash.asp

அரவிந்தன் நீலகண்டன் said...

தங்கள் உற்சாகப்படுத்தும் பதிவுக்கு நன்றி. தினமலருக்கும்.

Anonymous said...

நல்ல பதிவு,உங்களின் இதே தொடரில் வந்த மற்ற பதிவில் பின்னோட்டங்கள் இட முடியவில்லை. என்ன தவறு என்று தெரியவில்லை. தெளிவு படுத்தவும்